25 June 2009

இலங்கைக்கு 24 மில்லியன் டொலர் கடன் உதவி

இலங்கையின் சுகாதாரத் சேவைத் துறைக்கு உதவுவதற்காக உலக வங்கி 24 மில்லியன் டொலர் கடன் வழங்க அங்கீகாரம் அளித்துள்ளது. அண்மைய மோதலின் பின்னர் வடக்கு, கிழக்கில் ஏற்பட்டிருக்கும் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தக் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோதல்களினால் ஏற்படும் விளைவுகளுக்கு தீர்வு காண்பதற்கு உலக வங்கிக்கு இருக்கும் ஈடுபாட்டை இது வெளிப்படுத்துவதாக உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் நாகோ ஈசிசி வடக்கு, கிழக்கிற்கான சுகாதாரத் தேவைகளைப் பொறுத்து அதற்கான மதிப்பீடுகளின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுமென அவர் கூறியுள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் நடமாடும் சிகிச்சை நிலையங்களைப் பராமரிக்கவும் உடல் ஊனமுற்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும், மனவள ஆற்றல் குன்றியோருக்கு சிகிச்சையளிக்கவும் மற்றும் உடனடியாக முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் இந்தக் கடனுதவி பயன்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment