இடம்பெயர்ந்தோரின் தொகை உயர்வு
வன்னிப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் தொகை 2,85018 ஆக உயர்ந்துள்ளதாகப் புள்ளிவிபரத் தகவல் தெரிவிக்கின்றது பல்வேறு இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் கணக்கெடுப்பின் மூலமே எண்ணிக்கை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தில் 2 61 948 பேரும், யாழ் மாவட்டத்தில் 11069 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 6697பேரும்,மன்னார் மாவட்டத்தில்434பேரும்தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும்,பல்வேறு வைத்தியசாலைகளில் 4870பேர் வைத்திய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும். இதேவேளை 3054 பேர் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து உறவினர்களிடம் சென்று வசிப்பதற்காகவும், முதியவர்கள் பலர் முதியோர் இல்லங்களுக்கும்,சிறுவர்கள் பலர் சிறுவர் இல்லங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment