தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் 30 ஆம் திகதி வரை ஏற்பு
ஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிகளின்படி தேர்தலொன்றுக்கு வேட்புமனு கோரப்பட்ட தினத்திலிருந்து 10 நாட்களுக்குள் தபால் மூலம் வாக்களிப்போர் விண்ணப்பிக்க வேண்டும். இதன்படி கடந்த 14ஆம் திகதியுடன் இதற்கான கால எல்லை முடிவடையவிருந்தது. எனினும் இத்தினத்தை 25ஆம் திகதியான நேற்று வரை நீடிப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான கால எல்லை எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment