26 June 2009

சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள்; நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு தொகுதி நோயாளர்கள் மன்னார் மற்றும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நன்கு குணமடைந்த 89 நோயாளர்களில் 02 குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஆங்கில பயிற்சிக் கல்லூரியில் நலன்புரி நிலையத்திற்கும் ஏனைய 83 நோயாளர்கள் செட்டிக்குளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். தற்போது 600 நோயாளர்கள் வரை மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment