நல்லிணக்கத்தை ஏற்படுத்த தொடர்ந்து வலியுறுத்தும் - ரொபட் ஓ பிளேக்
தமிழ் மக்களுடன் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும் என ஒபாமா நிர்வாகத்தின் தெற்காசியாவுக்கான பிரதிநிதி ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுமுக நிலையை கொண்டு வருவதற்கு இன்னும் அநேகம் செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்த ரொபட் ஓ பிளேக் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்தவுடன் பொதுவான தொடர்புகள் விருத்தியடைந்த போதிலும் இன்னும் அநேகம் செய்யவேண்டி இருக்கிறது யுத்தத்தின் பின்னர், மனிதநேய நிவாரணம், சிறுபான்மையினரை அரசியல் நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியன குறித்து இலங்கை அரசாங்கம் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள், பயங்கரவாத்திற்கு முடிவு கட்டுவதற்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவசியமானவை என்றும் பிளேக் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment