24 June 2009

பொன்னாலையில் மீள் குடியேற அனுமதி

பொன்னாலை, காட்டுப்புலம், சவுக்கடி மற்றும் பொன்னாலைச் சந்தி போன்ற உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதன் முதற் கட்டமாக மேற்படிப்பகுதிகளிலிருந்து இம்மக்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டுவதற்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு வலி மேற்குப் பிரதேச செயலகத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் தமது பங்கீட்டு அட்டை, பிரதி, மடத்துக் காணியென்றால் அதற்குரிய ஆவணம் போன்ற ஆவணங்களுடன் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலர் மற்றும் பொன்னாலை ஜே 170 கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment