யாழ். முஸ்லிம்கள் மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பகுதியில் தங்கி வாழுகின்றவர்களில் யாழ்.மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமைக்குள் இவர்கள் தமது பிரிவு கிராம சேவையாளரிடம் தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்தி தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரங்குளி, சிறிமாபுரம், ஜின்னாதோட்டம், நல்லானகடுவ, புளிச்சாக்குளம், உடப்பு ஆகிய பகுதிகளில் உள்ள யாழ்ப்பாணப் பிரதேச அகதிகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் விண்ணப்பங்கள் தேர்தல் திணைக்களத்தால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் அனுப்பப்படும். அத்துடன் இவர்களுக்கு விசேட வாக்களிப்பு நிலையம் யாழ்.மாநகரசபைத் தேர்தல் நடைபெறும் தினத்தில் அவர்களின் பகுதியில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment