பசில் ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண், வெளிவிவகார செயலாளர் ஷிவ் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருடன்; பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இக் கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்தோர் முகாம்களின் நிலைமைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென இந்திய அதிகாரிகள் இலங்கைப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment