கொடிகாமம் இயற்றாலையில் புலி உறுப்பினர் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் கொடிகாமம், இயற்றாலை பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான சாலப்பன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.இயற்றாலை பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத்தினர் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே இவர் சுட்டுக் கொல்லப்பட்டார் இச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது மைக்ரோ ரக துப்பாக்கி 01 கையடக்க தொலைபேசி கண்டெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment