யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தை வரை
தாண்டிக்குளம் வரை விஸ்தரிக்கப்பட்ட யாழ்தேவி ரயில் சேவையை மூன்று மாதங்களில் ஓமந்தை வரை விஸ்தரித்து வடக்கிற்கான போக்குவரத்து முறைகளை இலகுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்கள வர்த்தக அத்தியட்சர் விஜய சமரசிங்க தெரிவித்தார். தண்டவாளங்கள், புகையிரத நிலையம் மற்றும் ரயில் சமிக்ஞை விளக்குகள் என்பன சீரமைக்கப்பட்டவுடன் சேவை ஆரம்பிக்கப்படும் என்றார்.வடக்கின் நண்பன் வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கிற்கான ரயில் சேவைகள் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக 14 பில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment