20 June 2009

யாழ். குடாநாட்டில் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி - பசில்

யாழ். குடாநாட்டு கடற்பரப்பில் 24 மணி நேரமும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் வகையில் அங்கு அமுலில் இருந்து வந்த தடை உடனடியாக நீக்கப்படுவதாக யாழ் காரைநகர் தியாகாராஜா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் செயலணிக் குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மீன்பிடித்துறை அமைச்சின் பிரதி அமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர், சமூகநலத்துறை அமைச்சர் , வடபகுதி கடற்படைத் தளபதி, யாழ். மாவட்ட ஆயுதபடைகளின் தளபதி, யாழ். அரச அதிபர்;, யாழ். மாவட்ட மீன்பிடித்துறை அதிகாரிகள், வடபகுதி கடற்தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 10 குதிரை வலு கொண்ட இயந்திரம் இணைக்கப்பட்ட படகுகளில் சென்று மீன்பிடிப்பதற்கும் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த வடபகுதி மீனவர்களுக்குத் தேவையான படகுகள், உபகரணங்கள் என்பவற்றை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment