30 June 2009

த.தே.கூ எம்..பி கனகரத்தினத்தை கொழும்பு நீதவான் நேரில் சென்று பார்த்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தைத் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கொழும்பு பிரதான நீதிவான், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு 29-06-2009 அன்று கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான், கனகரத்தித்தை நேரில் பார்த்த பின்னரே மேற்கண்ட அனுமதியை வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி வந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment