30 June 2009

பல்வேறு நபர்களின் கைகளில் உள்ள துப்பாக்கிகள் மக்களை மௌனிகளாவும் எதிர்க்க சக்தியற்றவர்களாகவும் ஆக்கியுள்ளன – வீ. ஆனந்தசங்கரி

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான தமிழர் விடுதலைக் கூட்ணியின் கொள்கை விளக்கக் கூட்டம் யாழ் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் எஸ் சங்கையா தலைமையில் நடைபெற்றது

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதன்மை வேட்பாளரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான வி.ஆனந்தசங்கரி அவர்கள் யாழ் குடாவில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நபர்களின் கைகளில் உள்ள துப்பாக்கிகள் மக்களை மௌனிகளாக்கவும், எதிர்க்க சக்தியற்றவர்களாகவும் ஆக்கியுள்ளன. நட்புடன் செயற்படும் இராணுவத்தினரால் இந்த நிலையை மாற்ற முடியவில்லை. கப்பம் பெறுதல், பிள்ளைகளை கடத்தி கப்பம் பெறுதல் போன்றன ஆயுதம் தாங்கிய குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவற்றை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும். என்றார்.

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் பொதுச் செயலாளர் தி.ஸ்ரீதரன் உரையாற்றும் போது, இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக வழியிலான தேர்தல் நடைபெறுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்க்கு முதற் கட்டமாக அரசு எந்த வகையான வேறுபாடுகளுமின்றி அனைத்துக் கட்சிகளிடமும் இருந்து ஆயுதங்களை உடனடியாக களைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்றார்

No comments:

Post a Comment