22 June 2009

கள வைத்தியசாலை அமைக்க ஐ.சி.ஆர்.சி நடவடிக்கை

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள நிவாரண கிராமங்களில் உள்ளவர்களின் வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அந்தப் பகுதியில் கள வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.எவ் என்ற பிரஞ்சு மருத்துவ தொண்டு நிறுவனத்தின் கள வைத்தியசாலை மற்றும் பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளின் கள வைத்தியசாலைகள் என்பன ஏற்கனவே இந்தப் பகுதியில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment