சகலருக்கும் சமமாக வாழுகின்ற உரிமை கிட்டியுள்ளது - ஜனாதிபதி
தன்னை மட்டுமே நினைத்து வேலைச்செய்யும் மனிதர்களை விட நாட்டைபற்றி சிந்தித்து வேலைச்செய்யும் மனித சமூகமே இன்று நாட்டிற்கு தேவையாகவுள்ளது. அபிவிருத்தி தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்தவேண்டிய காலமிது.எதிர்கால சந்ததியினருக்காக கட்டியெழுப்பப்படுகின்ற இந்நாட்டை பாதாள உலக கோஷ்டியினர், போதைப்பொருள் விற்பனையாளர்கள் இல்லாத நாடாக கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த 20 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஹதுகல தேயிலை தொழிற்சாலை மஹிந்த சிந்தனையின் கீழ் ஹிருவாய நவோதய வேலைத்திட்டத்தின் மூலமாக திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில் வடக்கு, தெற்கு, கிழக்கு வாழ்கின்ற சகலரும் சமமாக வாழும் உரிமை கிடைத்துள்ளது. நாம் இவ்வளவு நாளும் அரசியல், தேர்தல், விருப்புவாக்குகள் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம் எனினும் இந்த தாய் நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பிலேயே இன்று சிந்திக்கவேண்டியுள்ளது. தேர்தலை பார்த்துக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்
No comments:
Post a Comment