பொலிஸ் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் வைத்திருப்பதே சரியானது - சமரசிங்க
பயங்கரவாதப் பிரச்சினைக்கு முடிவு கிட்டியுள்ள நிலையில் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டியதன் தேவையை உணர்ந்துள்ள அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக குறிப்பிடும் போது தெரிவித்தார். பொலிஸ் அதிகாரங்கள் பற்றி தெரிவிக்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்பதில் இணக்கப்பாடு உள்ளது. ஆனால் இலங்கை சிறிய நாடு என்பதாலும் நாட்டின் தற்போதைய சூழல் காரணமாகவும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தம் வடக்கு கிழக்குக்கு மட்டும் வறையறுக்கப்பட்டிருக்கவில்லை என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே இவ்வாறான பின்னணியில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது யதார்த்தமாக அமையாது என்றே தான் கருதுவதாக குறிப்பிட்ட அமைச்சர் சமரசிங்க நாட்டின் நிலைமை சுமுகமானதும் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் தற்போதைய நிலைமையில் சாத்தியம் இல்லை என்றார்.
29 June 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment