ஊடகவியலாளர் கடத்தப்பட்டு, விடுதலை
வீரகேசரி நாளிதழின் பத்தி எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கிறிஸ்னி கந்தசாமி வத்தளை அவரிவத்த பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு கண்டியில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இனந்தெரியாத நபர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவரை கடத்திச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது.கண்டியிலிருந்து மீண்டும் கொழும்பிற்கு செல்ல 200 ரூபா பணத்தையும் கடத்தல்காரர்கள் வழங்கியுள்ளனர்.இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment