புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த சந்தேகநபர்கள் கைது
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு தமிழ் அமெரிக்கர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கருணா என்கிற கருணாகரன் கந்தசாமி, ராஜ பார்த்தீபன் என்கிற பார்த்தீபன் தவராசா (தம்பி சாம்ப்ராஸ், ஸ்டீபன் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு), டாக்டர் மூர்த்தி,விநாயகமூர்த்தி முருகேசு என்ற பெயர்களில் அழைக்கப்படுகிற முருகேசு விநாயகமூர்த்தி மற்றும் சந்துரு என்கிற விஜயசந்தர் பத்மநாதன் ஆகியோராவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் கந்தசாமி, விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்கக் கிளையில் இயக்குநராகப் பணியாற்றி வந்ததுடன், தமிழர் புனரமைப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் விடுதலைப் புலிகள் பணம் திரட்டி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment