ஆயுட்காலம் முழுவதும் நிறைவேற்று ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ - பேர்டி பிரேமலால்
அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஆயுட்காலம் முழுவதும் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ இருப்பார் என்று வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க சேருவிலவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தெரிவித்தாக பி.பி.சி யின் சந்தேசிய சிங்கள சேவை தெரிவிக்கிறது
பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பின் நாங்கள் அரசியலமைப்பை மாற்றுவோம். அதன்பின் இந்த நாட்டின் ஆயுட்கால ஜனாதிபதியாக ஜனாதிபதி ராஜபக்ஷ விளங்குவாhர் என்பது மிகத் தெளிவானது அரசியலமைப்பில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதாயின் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அதற்கு அங்கீகாரத்தைப் பெறமுடியும் என்றார்.
No comments:
Post a Comment