பிரச்சினைக்கு மூலகாரணத்தை இனங்கண்டு உரிய தீர்வு வழங்கவேண்டும்- டியூ
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் மூலகாரணமானவற்றை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க வேண்டியுள்ளது. இதற்கு புதிய அரசியல் அமைப்பு தேவையாகவுள்ளது என அரசியலமைப்பு அமைச்சரும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டியூ குணசேகர இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேராவின் 104ஆவது பிறந்த தின ஞாபகார்த்த கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்
மேலும் உரையாற்றுகையில்; மொழி மற்றும் வேலையில்லாப் பிரச்சினைகளே பயங்கரவாதம் ஏற்படக் காரணமாக அமைந்தது. யுத்தம் முடிவுற்ற நிலையில் 3 இலட்சம் மக்கள் முகாம்களில் அல்லல்படுகின்றனர். கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தால் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதில் பொதுமக்கள், படையினர் மற்றும் விடுதலைப்புலிகள் அடங்குகின்றனர். அரசியல்வாதிகளின் பிரச்சினையால் ஏற்பட்ட இந்நிலைமைக்கு பலியானது பொதுமக்களும் வறுமை மக்களுமே. உலகில் ஒரேயொரு இந்து இராச்சியமான நேபாளத்தில் மதபேதமின்றி பொதுநிலைப்பாட்டுக்கு வந்ததன் மூலம் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே எமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். சுதந்திரம் பெற்ற பின்னர் பண்டா டட்லியை தவிர நாட்டின் முக்கிய தீர்மானம் எடுக்கும்போது கதைத்துப் பேசியது கிடையாது என்றார்
No comments:
Post a Comment