25 June 2009

நிவாரணக் கிராமங்களுக்கு ஐ.ஓ.எம். உதவி

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவ புலம் பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனம் (IOM) முன்வந்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் ஐந்து (5) தண்ணீர் பௌசர்களையும் ஐந்து (5) மலசலம் அகற்றும் பவுசர்களையும் வழங்கியுள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் ஒரு 1.26.000 அமெரிக்க டொலர்களாகும். கொழும்பிலுள்ள ஐ. ஓ. எம். நிறுவனத்தில் இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (23) நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மொஹமட் அப்திகார் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரிடம் இவற்றை கையளித்தார்.

No comments:

Post a Comment