26 June 2009

நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மூன்று புலி சந்தேக நபர்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பொலிஸ் நிலையத்தில் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கடந்த ஒரு மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களான ராகுலன் எனப்படும் செல்லப்பா சிவானந்தன்-முள்ளிவெட்டுவான், கரண் என அழைக்கப்படும் பரமகுட்டி சாமுவேல்- வாகனேரி, புகழேந்தி என அழைக்கப்படும் கணபதிபிள்ளை அமரசிங்கம்- கொண்டையன்கேணி ஆகிய மூவரையும் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட வேண்டியிருந்ததால் நீதிமன்றத்திற்கு பொலிஸாரால் அழைத்துவரப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சமர்ப்பித்த பின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா எதிர்வரும் 24 ஆந் திகதிவரை இம் மூவரையும் தொடர்ந்தும் தடுத்துவைக்க அனுமதியளித்துள்ளார். இவர்கள் கடந்த மே மாதம் 28ம் திகதி வாகரை இராணவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்

No comments:

Post a Comment