26 June 2009

புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ் மற்றும் செய்மதி தெலைபேசிகள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கட்டைக்காடு பகுதியில், புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கேடி ரூபா பெறுமதியான ஜி.பி.எஸ் மற்றும் செய்மதி தொலைபேசிகள்,அவற்றுக்கான சிம் கார்டுகள் என்பன வவுனியா பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவலொன்றையடுத்து சோதனை நடடிக்கையை மேற்கொண்ட போது பனை மரம் ஒன்றின் மீது இவைகள் இரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.ஜிபிஎஸ் 39, செய்மதி தொலைபேசிகள் 12, அவற்றுக்கான சிம் கார்டுகள் 13, கொம்பாஸ் 44, தொலைநோக்கி கண்ணாடிகள் 06, தோட்டாக்கள் 14 என்பனவே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment