மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊர்வலம்வவுனியா வைரவபுளியங்குளம் ஏழாம் நாள் திருச்சபையின் சர்வதேச பாடசாலை நிர்வாகியும் போதகருமான இராசலிங்கம் நகுலேஸ்வரன் கடந்த 06ம் திகதி கொழும்பு சென்று திரும்பி வருவதற்காக பஸ் வண்டியில் ஏறியதாகவும் அன்றைய தினம் வீட்டுக்கு திரும்பி விடுவதாக தொலைபேசியில் தனது மனைவியடம் தெரிவித்தவர் காணாமல் போயுள்ளார்.அவரை மீட்டுத்; தருமாறு கோரி, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தினர். பாடசாலையில் ஆரம்பமான ஊர்வலம், மன்னார் வீதி வழியாக வவுனியா செயலகத்தைச் சென்றடைந்து முடிவில் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. கடந்த 11 வருடங்களாகச் செயற்பட்டு வரும் இந்த சர்வதேச பாடசாலையில் வவுனியா மாவட்டத்தின் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment