15 July 2009

அணிசேரா நாடுகளின் 15வது உச்சிமாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றுவார்

எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் இன்று காலை ஆரம்பமாகும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக எகிப்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்றைய முதல் நாள் அமர்வில் விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ~அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் உலகம் எதிர்நோக்கும் சவால்கள், பாதுகாப்பு, ஆயுதக் களைவு, சூழல் மாற்றம், மற்றும் மனித உரிமைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அணிசேரா நாடுகள் அமைப்பில் 118 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment