அரசியல் தீர்வை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரல் - மைத்திரிபால சிறிசேன
எதிர்வரும் செப்டெம்பர் 1ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாட்டில் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கிய அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படவுள்ளதாக கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தின் கீழான புதிய நடவடிக்கைகளுடன் கூடிய பல அரசியல் தீர்மானங்களை இந்த மாநாட்டில் வெளியிடத் தீர்;மானித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment