215 முதியவர்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நலன்புரி நிலையங்களில் குடும்ப உறவினர்களைப் பிரிந்துவாழும் 245 பேரை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையும் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டவேளை யாழ். குடாநாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 215 முதியவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நலன்புரி நிலையங்களில் பிரிந்து வாழும் குடும்பங்கள் தொடர்பில் மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சரியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சியிருப்பவர்களையும் அவர்களது குடும்பங்களுடன் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment