இந்திய உதவியுடன் முதலாவது ரயில்பஸ் சேவை கிழக்கு மாகாணத்தில் ரயில் போக்குவரத்து சேவையை விஸ்தரிக்கும் வகையில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 10 பஸ் வண்டிகள் மூலம் 5 ரயில்பஸ் வண்டிகளை தயாரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ் வண்டிகளைப் பொருத்தி தயாரிக்கப்பட்ட முதலாவது ரயில்பஸ் இன்று (29-07-2009) சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நடைபெற்ற இப் போக்குவரத்து சேவை நிகழ்வு ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ,மத்திய போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும,ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டனர். சேவையில் ஈடுபடவிருக்கும் இவ் ரயில்பஸ் வண்டி தற்போதைக்கு மட்டக்களப்பிற்கும் - வெலிக்கந்தைக்கு இடையில் தினமும் ஒரு சேவையில் ஈடுபடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment