18 July 2009

புகைப்படங்களை வைத்து பொய்ப்பிரச்சாரத்தில் புலி ஆதரவு

இணையத்தளங்கள்கடந்த 2009.07.11 ஆம் திகதி சனிக்கிழமை மெனிக்பாம் அகதி முகாமுக்கு இளையோர்களின் செயற்திட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுக்கச் சென்றிருந்த நாமல் ராஜபக்ஷ அங்குள்ள மக்களினால் சேறடிப்புக்கு உள்ளானதாக கடந்தவாரம் புலிகளின் இணையத்தளங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தன. ;இது தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக லங்கா நியுஸ்வெப் இணையத்தளம் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டதாகவும் அதற்காக எல்லகடந்த ஊடகவியலாளர் அமைப்பும் கண்டனம் தெரிவித்த செய்திகளும் ஏற்கனவே வெளியாகி இருந்தன."இளைஞர்களுக்கு நாளை" அமைப்பின் தலைவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ தாக்கப்பட்ட செய்தி பொய்யானதாகும். அவர் வன்னி மக்களைச் சந்திக்க செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால் அது பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக வெளிவந்திருக்கும். புலிகளின் இணையத்தளங்கள் புகைப்படங்களை வைத்து மக்களிடையே பொய்ப்பரப்புரைகளை மேற்கொள்வது வழக்கமானதாகும். இம்முறை தமிழ்மக்களை ஏமாற்ற மீண்டும் செய்யப்பட்ட பரப்பரை மோசடி இதுவாகும்.

http://www.theneeweb.de/html/180709-4.html

No comments:

Post a Comment