எதிர்வரும் ஆகஸ்ட் 6ம் திகதி முதல் 15ம் திகதி வரை நடைபெறவுள்ள மடு மாத தேவாலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, மதவாச்சி முதல் மடு தேவாலயம் வரை விசேட பாதுகாப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மடு தேவாவலயத்தைப் புனரமைப்பதற்காக இலங்கை அரசாங்கம் 4 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் குடிநீர் உள்ளிட்ட சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பு ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment