தீர்வு விடயத்தில் ஜனாதிபதி தெளிவான நிலையில் - ராஜித
அதிகாரப் பகிர்வு குறித்தும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவான நிலைப்பாட்டுடன் இருப்பதாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண,ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.மேலும் கூறுகையில் ஆளும் தரப்பில் இருந்து கொண்டே விமல் வீரவன்ச போன்றவர்கள் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனரட்ண ஆறு வருடங்களுக்கு மேலாக இவ்வாறானவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது அரசாங்கத்திற்குள் வந்ததன் பின்னரும் கத்துகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை. ஏனெனில் அதிகாரப் பகிர்வு மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தெளிவாக இருக்கிறார். அதை உரிய நேரத்தில் அவர் நிறைவேற்றுவார் என்றார்தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறது. எனினும் ஓய்வு பெற்றுச் செல்ல வேண்டிய வயதில் சிலர் கட்சி தலைமைப் பதவியில் அமர்ந்து கொண்டு அதிகாரப் பகிர்வினை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் பயங்கரவாதிகள் இருக்கும் சமயத்தில் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசினால் இது புலிகளுக்கு சாதகமாக அமையுமென்றனர். தற்போது பயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட நிலையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தேவையற்ற விடயமென்கின்றனர் என்றார்
No comments:
Post a Comment