வடக்கின் வசந்தம் அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்திற்காக விசேட நிதி ஒதுக்கீட்டை இலங்கை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் சுமித் அபேசிங்க, மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் கப்ரல் ஆகியோர் உட்படப் பல தனியார் வங்கிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment