15 July 2009

யாழ். பாடசாலைகளுக்கு 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் பாடசாலைகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் கல்விவலயத்தில் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயம்,யாழ். முத்துத்தம்பி மகாவித்தியாலயம், யாழ்.சென் சார்ள்ஸ் வித்தியாலயம், யாழ். சென்ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயம்,யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி,யாழ்.சென் மேரிஸ் வித்தியாலயம், திருநெல்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றதின் வகுப்பறைக் கட்டிடவேலைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. மேலும், தென்மராட்சி கல்வி வலயத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியும் வலிகாமம் கல்வி வலயத்தில் சுதுமலை சின்மயபாரதி, சில்லாலை றோமன் கத்தோலிக்க பாடசாலை, மல்லாகம் மகாவித்தியாலயம், இணுவில் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் மாடிக்கட்டிட வேலைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. வடமராட்சி கல்வி வலயத்தில் இமையாணன் அரசினர் கலவன் பாடசாலை, வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம், ஸ்ரீநாரதா வித்தியாலயம்,கரவெட்டி ஞானாசாரியார் கல்லூரி,வல்வை மகளிர் வித்தியாலயம், கொற்றாவத்தை மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் கட்டிடக் குறைவேலைகளும் நிறைவு செய்யப்படவுள்ளன. தீவுப்பகுதி கல்வி வலயத்தில் வேலணை சரஸ்வதி வித்தியாலய கட்டிட வேலைகளும் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

No comments:

Post a Comment