தேவையின் நிமித்தம் புதிய இராணுவ முகாம்கள் - ஜெனரல் ஜகத் ஜயசூரிய
வடபகுதியில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களின் தேவையின் நிமித்தம் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுமென புதிய இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய பதவியேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவத்தினர் உள்ளனர். ஆனால் முகாம்கள் இல்லை. தற்காலிக முகாம்களிலேயே தங்கியுள்ளனர். முகாம்களை அமைப்பதற்கு அரச காணிகள் தொடர்பான விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்களில் முகாம்களை அமைக்கவும் எண்ணியுள்ளோம். இராணுவத்தினர் ஒன்றில் யுத்தம் புரியவேண்டும் அல்லது பயிற்சியில் ஈடுபடவேண்டும். யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால் மீண்டும் அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடவேண்டும். நாட்டில் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் நிலை நாட்டுவதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும்.
No comments:
Post a Comment