இடம்பெயர் மக்களுக்குத் தேவை அமைதியானதும் இயல்பானதுமான வாழ்வே : சித்தார்த்தன்யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மூன்று லட்சம் மக்களின் வாழ்க்கையில் அமைதியும் இயல்பு நிலைமையும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான அடிப்படைகளை விட்டுக்கொடுக்காத நிலைப்பாடும், தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரதும் ஐக்கியமுமே இப்போது தேவை என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 20 ஆவது வீரமக்கள் தின வைபவத்தில் உரையாற்றிய அக்கழகத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும் (புளொட்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் இணைந்து இவ்வைபவத்தை ஒழுங்கு செய்திருந்தன. வவுனியா கோவில்குளத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபரான மறைந்த உமா மகேஸ்வரனின் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் இந்த வைபவம், அந்த அமைப்பின் வன்னி மாவட்டப் பொறுப்பாளர் கே.சிவநேசன் (பவான்)தலைமையில் நடைபெற்றது.
ஆயுதப் போராட்டத்தின் போது கொல்லப்பட்ட அனைத்துப் போராளிகள், பல்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழ் அரசியல் தலைவர்கள், போர் சூழலில் கொல்லப்பட்ட அனைத்து பொதுமக்கள் ஆகியோரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த வீரமக்கள் தின வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு உரையாற்றிய சித்தார்த்தன் மேலும் தெரிவித்ததாவது: "தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் தமிழ் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. கத்தியின்றி இரத்தமின்றி அஹிம்சை வழியில் போராட்டம் நடத்திய தந்தை செல்வநாயகத்தின் சத்தியாக்கிரக போராட்டத்தின் போது வடக்கு கிழக்குப் பிரதேசமெங்கும் இரண்டு மாதங்கள் அரச செயலகங்கள் செயலற்று ஸ்தம்பிதமடைந்திருந்தன.
இந்த ஒற்றுமை பின்னர் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்டிருந்தது. அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒரே விடயத்தை வலியுறுத்தி தமது ஒற்றுமையை நிலைநாட்டியிருந்தார்கள். அதன் பின்னர் தமிழ் அமைப்புக்கள் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான செயற்பாடுகளில் ஒருபோதும் ஒற்றுமைப்படவில்லை.
அஹிம்சை வழி போராட்டங்கள் பலனளிக்காத நிலையில் மக்களை ஒன்றுதிரட்டிய ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் மறைந்த எமது தலைவர் உமா மகேஸ்வரனின் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானது. இந்த ஆயுதப்போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அந்த ஆயுதப் பேராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார். தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என்ற நிலைப்பாடும், தமிழ் மக்களின் தலைமைக்கு ஏகபோக உரிமை கொண்டாடியமையும் நிலைமைகளை மேலும் மோசமாக்கியது.
ஆயுதப் போராட்டம் இன்று முறியடிக்கப்பட்டுவிட்டது. தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம், இனிமேல் சாத்தியமாகாது என்ற நிலைமைக்கு இப்போது தள்ளப்பட்டு விட்டது. ஆயுதப் போராட்டம் காரணமாக மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து களைத்து சோர்ந்து விட்டார்கள். பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். மக்கள் இப்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.
இந்த மக்களுக்கு இப்போது தேவைப்படுவது நிம்மதி. இந்த நிம்மதியையும் ஓர் அமைதியான வாழ்க்கையையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது அவசரமானது. அத்தியாவசியமானது.

இதனை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அனைவராலும் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நிம்மதிக்கும், அமைதி வாழ்க்கைக்கும் அவசியமான அடிப்படைகளை விட்டுக்கொடுக்காத வகையில் செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். பன்முகப்படுத்தப்பட்ட ஜனநாயக வழிகளிலான செயற்பாடுகளை நாங்கள் விரும்புகிறோம்.
அதேவேளை, அடிப்படை விடயங்களில் விட்டுக் கொடுக்காத ஐக்கியம், தமிழ் அரசியல் கட்சிகளிடையேயும், தமிழ் அமைப்புக்களிடையேயும் ஏற்பட வேண்டியதும் முக்கியமானது. ஐக்கியப்பட்ட செயற்பாட்டின் மூலம் மாத்திரமே தமிழர் தரப்பின் அரசியல் வலிமையை நிலைநிறுத்தவும், அதன் ஊடான ஆக்கபூர்வமான அரசியல் செயற்பாடுகளையும் எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியும்"என அவர் தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், முன்னாள் நகரசபைத் தலைவரும், அக்கட்சியின் வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான முக்கிய வேட்பாளருமான ஜி.ரீ.லிங்கநாதன் உட்படப் பலரும் அஞ்சலி உரையாற்றினார்கள்.
பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு மறைந்த உமா மகேஸ்வரனின் நினைவுச் சின்னத்திற்கும் அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப்படங்களுக்கும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment