18 July 2009

கிழக்கு மகாணத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் பணிகள் நிறுத்தம்.

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிகள் அனைத்தும் நேற்று (17.07.2009) முதல் தமது சேவையினை நிறுத்தியுள்ளது. நாட்டில் மோதல்கள் நிறைவடைந்துள்ளமையினால் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை மட்டுப்படுத்துமாற அரசாங்கம் கேட்டிருந்ததற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டத்தின் சர்வதேச செஞ்சிலுவை சங்கபணிமனை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருகோணமலை, மட்டக்களப்பு, மூதூர், மற்றும் அக்கரைப்பற்று, ஆகிய பகுதிகளில் செஞ்சிலுவை சங்க பணிமனைகள் அனைத்தும் பொதுமக்களுக்கான சேவையினை நிறுத்தியுள்ளன. செஞ்சிலுவை சங்கத்தினர் கடந்த 1991ம் ஆண்டு தொடக்கம் தமது பணியினை கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment