18 July 2009

ஊழியரை தாக்கியவர்கள் கைது செய்யப்படவேண்டும் - இரா. துரைரத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை வீதியில் சேவையில் ஈடுபட்டிருந்த இ போ ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா ஈ.பி.ஆh.;எல்.எப் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா துரைரட்ணம்(ரட்ணம்) தெரிவித்துள்ளார். இது பொலிஸாரின் கடமையாகும். மட்டக்களப்பு மாவடத்தில் ஆயுதக் குழுக்கள் இல்லை என அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் இவ்வாறான தாக்குதல்கள் நடத்துபவர்கள் யார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த இ.போ.ச ஊழியர்களை சந்தித்து பேச்சுவார்தை நடத்திய இரா துரைரட்ணம் அது குறித்து தெரிவிக்கும் போது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் வேலைக்குத் திரும்புங்கள் என பொலிஸார் உறுதியளித்த போதும் முதலில் கைது செய்யுங்கள் பின்னர் வேலைக்கு திரும்புகின்றோம் என தெரிவித்துள்ளனர். இது நியாயமான செயற்பாடே. மட்டக்களப்பில் ஆயுதக் குழுக்கள் என்று எதுவும் இல்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது. சட்ட வரையறைக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஆயுதங்கள் வைத்துள்ளனர். அப்படியானால் அவர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். இல்லையேல் இனங் காணமுடியாத ஆயுதக் குழு ஒன்று இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இதனை தவிர வேறு யாரும் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற இடம் 24 மணிநேரமும் அதிரடிப்படையினரின் கண்காணிப்பிற்கு உட்பட்ட பகுதியாகும். இப்படியான நிலையில் யாரும் தெரியாது என்று கூறமுடியாது எனவே பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment