மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக உரிய நடவடிக்கை -சிதம்பரம்
தமிழக மீனவர்கள் மீதான கடற்படையினரின் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மக்களவையில் தெரிவித்தார். தி.மு.க. உறுப்பினர் இளங்கோவன் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வான் வழி கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளையடுத்து இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றார்
No comments:
Post a Comment