27 July 2009

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தமிழ்கட்சிகள் ஒன்றினைந்து செயற்படுவதன் மூலமே வென்று எடுக்க முடியும் - மோகன் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்)

தமிழ்தேசிய கூட்டமைப்பின் 22 பாரளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பினை பிரதிபலிக்க தவறிவிட்டதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் யாழ் மாநகரசபையின் வேட்பாளருமான கந்தையா சிவராஜா ரிபிசியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தமிழ்கட்சிகள் ஒன்றினைந்து செயற்படுவதன் மூலமே வென்று எடுக்க முடியும் எனவும் அதன் அடிப்படையிலே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியினர் செயற்பட்டுவருவதாக தெரிவித்த அவர் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்க்காக அரசுடன் இணைந்து செயற்பட வேண்டியதேவையில்லை எனவும் ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்படவேண்டிய தேவைபற்றியும் விளக்கினார் தற்போது யாழ்பாணத்திற்க்கான ஏ-9 போக்குவரத்து பாதை மிகவும் விளம்பரத்துடன் திறக்கபட்ட போதிலும் மறுதினமே அப்பாதை மூடுபட்டதாக தெரிவித்த அவர் மக்களால் தெரிவுசெய்யபட்ட அரசு என்கின்ற ரிதீயில் அபிவிருத்தி செய்யவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என தெரிவித்தார் அதேவேளை எமது பகுதிக்கான அபிவிருத்திகளை அல்லது எமது அரசியல் உரிமைகளை வென்று எடுப்பதற்கான தடையாக இருந்தவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் எனவும் அவர்களுக்கு கிடைத்த சந்தர்பங்களை சரியாக பயண்படுத்தாமால் மட்டும் அல்லாது புலிகளுக்கும் எடுத்து கூற தவறிவிட்டார்கள் எனவும் அதானால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகளுமே பொறுப்பு எனவும் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் மத்திய குழு உறுப்பினருமான தம்பா கருத்து தெரிவிக்கையில் புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் எம் மக்கள் ஆக்கவும் அழிக்கவும் கூடிய சக்தியுடைவர்கள் எனவும் இத்தேர்தலில் தாங்களுடை பொறுப்பினை உணர்ந்து செயற்படவேண்டும் என கேட்டு கொண்டார்

No comments:

Post a Comment