அமெரிக்க உதவிச் செயலாளர் முகாம்களுக்கு விஜயம்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க புலம்பெயர் அகதிகளுக்கான மக்கள் பணிமனையின் உதவி இராஜாங்கச் செயலாளர் எரிக் பி. ஸ்வாட்ஸ், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் கண்டு திருப்தி தெரிவித்துள்ளார். இவருடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர், நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட உள்ளிட்ட குழுவினர் சகிதம் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தனர்.
No comments:
Post a Comment