19 July 2009

மீள்குடியேற்றம், அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஆதரவு – பிரிட்டிஷ் தூதுவர்

கிழக்கு மாகாணத்தின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக அங்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்ஸ் இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் மீளக்குடியேற்றம் ஆகியவற்றுக்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் வீதிகளில் காவலரண்கள் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருந்தமை தான் அவதானித்த முதலாவது விடயமாகும். குறிப்பாக கொழும்பிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பைச் சுற்றியுள்ள வீதிகளில் காவலரண்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது. பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வமான நிகழ்ச்சி நிரலை கிழக்கு மாகாண அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், நிதி வசதி போதாததால் திட்டங்களை அமுல்படுத்த முடியாமல் திண்டாடுகின்றது. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக கொழும்பிலுள்ள உயர் ஸ்தானிகராலயத்திடம் பிரிட்டிஷ் வர்த்தக சமூகம் அதிகளவிலான கேள்விகளை எழுப்பியுள்ளது. திருகோணமலை நகரம் அறுகங்குடா, யால தேசிய பூங்கா போன்றவற்றில் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றம் அடைந்திருப்பதன் விளைவாக உல்லாசப் பயணிகளும் வர்த்தக சமூகமும் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் வருகை தருவதற்குமான சாத்தியங்கள் காணப்படுகின்றன. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளது. முகாம்களில் இருந்து மக்களை வெளியே கொண்டு வருவதற்கு உதவுவதே பிரிட்டிஷ் அரசு மேற்கொள்ளவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

No comments:

Post a Comment