புலி வேட்டையாட, பிடுங்கித் தின்னும் கழுதைப் புலிகள்!
- சதாசிவம். ஜீ.
- சதாசிவம். ஜீ.
“தமிழர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கும் அதேவேளை புலிகளின் சர்வதேச கடத்தலுக்குப் பொறுப்பானவரும் புலிகளின் தற்போதைய தலைவராக பிரகடனப்படுத்தியுள்ளவருமான கே.பி.பத்மநாதன் தெரிவித்திருக்கிறார். அஃதானப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்டர்போலால் தேடப்படும் ஒருவர் தொடர்பில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம்தான் இது.
புலிகளின் ஆயுதப் வன்முறை முற்றுமுழுதாக முடிக்கப்பட்டது. அதனை முன்னேடுத்த புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை. எஞ்சியுள்ளது கழுதைப் புலிகள். இவை புலி அல்லது சிங்கங்களால் வேட்டையாடப்படும் இரையை அடாவடித்தனமாக பிடுங்கும் இயல்பினைக் கொண்டது.
“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் முடிவடையவில்லை” என்பவர்களும் புலம்பெயர் தேசங்களிலிருக்கும் புலிபினாமிகளும் மேலே குறிப்பிட்ட கழுதைப் புலிக்கே ஒப்பானவர்கள். தமிழ் மக்களிடம் தொடந்து தட்டிப்பறித்து வயிற்றை வளர்க்கும் கேவலம் கெட்டவர்கள்.
தமிழ் மகா ஜனங்களுக்கு நாம் பலமுறை பலவழிகளில் புரியவைக்க முனைந்துள்ளோம். இதே இணையத்தளத்தில் பல அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தோம். புலிகளின் முடிவை புலிகள் ஆரம்பித்ததிலிருந்து பலரும் சுட்டிக்காட்டியிருந்தாலும் மாவிலாறு அணைக்கட்டை மூடி அரசாங்கத்தின் மீது போரைத் தொடங்கிய போது பெரும்பாலானவர்கள் புலிகளின் அழிவை ஆரூடம் கூறியிருந்ததோடு இறுதிநேரத்தில் பெரும்தொகையான தமிழ் மக்கள் உயிர் துறப்பர் என்றும் புலிகளே பெரும்பாலானவர்களை கொல்வார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் புலிவால்பிடிகள் மற்றும் புலி கூட்டமைப்பும் சாத்திரியின் சாத்திரம் என்றே எடுத்துக்கொண்டனர். தமிழ் மகா ஜனங்களோ நம்ப மறுத்து ஏமாந்துபோனார்கள்.
மேலும் முழு விபரம் http://www.theneeweb.de/html/270709.html
மேலும் முழு விபரம் http://www.theneeweb.de/html/270709.html
No comments:
Post a Comment