05 August 2009

மடுத் தேவாலய உற்சவம்

எதிர்வரும் 06-09-2009 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மடு உற்சவத்தைத் தொடர்ந்து தேவாலயத்தை சுற்றியுள்ள பாதைகளை உள்ளடக்கி பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மடுத்தேவாலயத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மதவாச்சியில் இருந்து மடு வரையான 12 கி.மீ பாதை செப்பனிடப்பட்டுள்ள அதேவேளை தேவாலயத்தை சுற்றியுள்ள 800 மீற்றர் வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, ஆலயத்துக்கு வரும் பக்தர்களை பதிவு செய்து கொள்வதற்கு தேவையான விண்ணப்பப்படிவங்களை நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். தேவாலயத்திற்கு வரும் பக்தர்களை பதிவு செய்யும் பணி மதவாச்சியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment