05 August 2009

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் 1800 தேர்தல் கண்காணிப்பாளர்கள்

ஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் 1800 இற்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளதுடன், தேர்தல் பிரச்சார காலம் முடிவடைந்த பின்னரும் கட்வுட்கள், பிரச்சார நடவடிக்கை அலுவலகங்கள் போன்றவற்றை அகற்றாமல் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊவா மாகாண சபைத் தேர்தலும் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனிய நகரசபை ஆகியவற்றுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளன. இதற்கான பிரசார நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் ஏற்கெனவே தமது பிரதிநிதிகளை அதற்கான பணிகளில் ஈடுபடுத்தியுள்ளன. அது மட்டுமல்லாது, வாக்களிப்பு தினத்தன்று கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை மேலும் பன்மடங்கால் அதிகரிக்கப்படவுள்ளன.

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கென பதுளை மாவட்டத்தில் 507 வாக்களிப்பு நிலையங்களும் மொனராகல மாவட்டத்தில் 307 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இதேநேரம், யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கென இடம்பெயர்ந்தோருக்கான 16 வாக்குச் சாவடிகள் உட்பட மொத்தமாக 86 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதில் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கென புத்தளம்-06, அநுராதபுரம்-04, கம்பஹா-02,கொழும்பு-02, களுத்துறை-01, யாழ்ப்பாணம்-01ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 16வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதேநேரம், வவுனியா நகரசபைத் தேர்தலுக்கென 18 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் கபே அமைப்பு வாக்களிப்பு தினத்தன்று ஊவா மாகாண சபை,யாழ்;பாண மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தலுக்கென முறையே 675,55, 30 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.


அமைப்பு ஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகரசபை,வவுனியா நகரசபை தேர்தலுக்காக முறையே 579,106,28 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அதன் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் சீ.எம்.வி ஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகரசபை,வவுனியா நகரசபை தேர்தலுக்காக முறையே 295,43,20 பேரை கண்கணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தவுள்ளது.

No comments:

Post a Comment