ஏறாவூரில் ஒருவர் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு ஏறாவூர் மக்கா மாவடி வீதியில் நேற்றிரவு (11-08-2009) 8.45 மணியளவில் சாகுல் ஹமீட் முகமது சமத்(41) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை வீட்டில் தொழுகையில் இருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கியவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரது சடலம் ஏறாவூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment