அமெரிக்கா 15 மில். டொலர் நிதி உதவி
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையம் , 2008-2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானப் பணிகளுக்காக 59 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இந் நிதியுதவியை நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷவிடம் அமெரிக்கப் பிரதித் தூதுவரான ஜேம்ஸ் ஆர். மூர் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான பணிப்பாளர் ரெபேக்கா கான் கையளித்த பின் தெரிவிக்கையில் மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவு உதவியை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையம் ஆதரவு வழங்கும் என்றார். இடம்பெயர்ந்த மக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் அவர்களது சொந்த இடங்களுக்கும், வீடுகளுக்கும் திரும்ப அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எமது நிதி உதவி ஆதரவாக அமையும்.
மக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பிய பின்னர், நாம் வழங்கும் உதவியின் ஒரு பகுதியாக இப்பங்கீட்டு உணவுப் பொருட்கள் ஆறு மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.
மேலும், இம்மக்கள் தமது வாழ்வாதாரப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பாக “உழைப்பதற்கு வேண்டிய உணவு” என்றவாறு நாம் வழங்கும் உணவு ஒரு குறுகிய காலம் வரை பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment