1500 குடும்பங்கள் தமது சொந்த இடங்களுக்கு
வன்னியில் யுத்தத்தால் சிக்குண்டு தற்போது நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1500 குடும்பங்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நிகழ்வு இன்று வவுனியாவில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது.
அம்பாறைக்கு 190 பேரும், மட்டக்களப்புக்கு 329 பேரும், திருமலைக்கு 292 பேரும், கந்தளாய்க்கு 634 பேரும் இன்று அனுப்பப்படவுள்ளதாகவும், யாழ். நகருக்கு 52 குடும்பங்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து செல்லவுள்ளதாகவும், யாழ். இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 3020 குடும்பங்களும் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. எச். சந்திரசிறி தெரிவித்தார்.
No comments:
Post a Comment