05 August 2009

முகாம்களில் இருக்கும் சிறுவர்களுக்கென புனர்வாழ்வு நிலையம்

வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கென புனர்வாழ்வளிப்பதற்காக செயற்குழுவொன்றை நியமிக்கவும், தனியான புனர்வாழ்வு நிலையமொன்றை அமைப்பதற்கு நீதியமைச்சு தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இந்த முகாம்களில் தங்கியிருக்கும் 400 சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான செயற்குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்த நீதியமைச்சின் செயலாளர் புலிகளின் செயற்பாடுகளில் சிக்கியிருந்த 13 வயது முதல் 18 வயதுவரையான சிறுவர்கள் இப்போது வவுனியா முகாம்களில் தங்கியிருக்கின்றர். இவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

இவ்வாறான சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக வவுனியா வைத்தியசாலையின் கண்காணிப்பின் கீழ், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கல்வி அதிகாரிகளின் உதவியுடனும்,யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடனும் இந்த செயற்குழு நியமிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இந்த சிறுவர்களுக்கான புனர்வாழ்வு முகாம் வவுனியா விவசாயக் கல்லூரியில் அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment