கேள்விகளுக்கு வரதரின் விடைகள் (பகுதி 2)கேள்வி:- தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வைப் பெறும் வகையாக சிங்களத் தலைவர்களைப் பணிய வைப்பதற்கு புலிகள் தமிழர்களின் அரசியல்-இராணுவப் பலமாக இருந்தார்கள். இப்போது புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்கள் பலமிழந்து போயிருக்கிறார்கள் அல்லவா? புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை யாரால் நிரப்ப முடியும்? தமிழர்களுக்குரிய அரசியற் தீர்வைப் பெறுவதற்கு சிங்களத் தலைவர்களை பணிய வைக்க இனிமேல் யாரால் முடியும்?
பதில் :- கேள்வியை எழுப்பியுள்ள அன்பார்ந்த நண்பர்களே! உங்களின் கேள்விலேயே பல தவறுகள் உள்ளன. புலிகள் இராணுவரீதியில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இருந்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் புலிகள் தமிழர்களின் அரசியல் இராணுவ பலமாக இருந்தார்கள் என்பதே உங்கள் கேள்வியிலுள்ள முதலாவது தவறு. அதைப்பற்றிய விளக்கத்துக்கு போவதற்கு முதலில் உங்கள் கேள்வியில் உள்ள இரண்டாவது தவறையும் சுட்டிக் காட்டுவது அவசியம் என்று கருதுகிறேன். அதாவது, புலிகள் சிங்களத் தலைவர்களை அடிபணிய வைக்கக் கூடிய சக்தியாக இருந்தார்கள் என்பது இரண்டாவது தவறாகும். உங்களது கேள்வியில் உள்ளடங்கியிருக்கும் மூன்றாவது தவறையும் இங்கு கூறிவிடுகிறேன். அதாவது புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்களின் அரசியல் பலத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதே மிகப் பெரிய தவறாகும். மேலும் புலிகள் அழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் சிங்களத் தலைவர்களைப் பணிய வைக்க யாரால் முடியும் என்று ஆதங்கத்துடன் கேட்பதே அடிப்படையில் ஒரு தவறாகும்.
முழு விபரம் http://www.thenee.com/html/110809-3.html
No comments:
Post a Comment