10 August 2009

புலிகள் இயக்கத்தின் சர்வதேச அமைப்பே நொறுங்கிவிட்டது - கோத்தபாய ராஜபக்ஷ

புலிகளின் தலைவரென உரிமை கோரியவரான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ததன் மூலம் புலிகள் இயக்கத்தின் சர்வதேச அமைப்பே நொறுங்கிவிட்டது என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ~சண்டே ஒப்சேவர் ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அரசும் அதன் உளவுப்பிரிவும் கடந்த 2 மாதங்களாக மேற்கொண்ட கடின உழைப்பின் காரணமாகவே பத்மநாதனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.

அவரைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வந்துவிட்டதால் அந்த அமைப்பின் சர்வதேசத் தொடர்புகளை இனி ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து தகர்த்துவிட முடியும். இந்த விஷயத்தில் இலங்கைக்குப் பிற நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் உதவியது.

புலிகள் இயக்கத்துக்குத் தேவைப்பட்ட இராணுவச் சாதனங்களையும் போர் தளவாடங்களையும் இதர கருவிகளையும் வாங்கி கள்ளத்தனமாக அனுப்பிக் கொண்டிருந்த பத்மநாதன் சிக்கிவிட்டதால் இனி;புலிகள் இயக்கம் தலையெடுக்கவே முடியாது

பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் பூண்டோடு அழித்த பிறகு கூட, வெளிநாடுகளிலிருந்து செயல்படும் அரசை அறிவிக்க பத்மநாதன் தயங்கவில்லை. எனவே அவர் மூலம் புலிகள் இயக்கம் மீண்டும் துளிர்விடும் வாய்ப்பு இருந்தது. இப்போது அந்த முயற்சியே பொசுக்கப்பட்டுவிட்டது.
பத்மநாதனைப் பிடிப்பதற்காக எல்லா நடவடிக்கைகளையும் மிகவும் சாமர்த்தியமாக மேற்கொள்ளப்பட்டன. அவரை அறியாமலேயே அவரைச் சிக்கவைக்க வலையை விரித்தோம். நம்மைப் பிடிக்க முடியாது என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தி அதன் விளைவாகவே அவரை நடமாடவைத்து தக்க நேரத்தில் கைது செய்தோம்.

உலகத்திலேயே மிகவும் பயங்கரமானதும் எந்தப் பிடியிலும்; சிக்கவே சிக்காததும் என்று வர்ணிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒடுக்கும் வேலையில் தங்களுடைய அரசு வெற்றி பெற்றுள்ளது.
புலிகளுக்கு உதவிய நாடுகளும் அமைப்புகளும்கூட தாங்கள் எத்தகைய அமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம் என்ற கசப்பான உண்மையை இப்போது உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

இலங்கை அரசின் திறமை மீதும் அதன் உறுதியான நடவடிக்கைகள் மீதும் பிற நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால்தான் இந்த ஒத்துழைப்பை அவர்களிடமிருந்து பெற முடிந்ததுஜனாதிபதி மகிந்த ராஜபட்சவின் சீரிய தலைமையும், நிர்வாகத் திறமையும், நெஞ்சுரமும், விடாமுயற்சியும்தான் இந்த வெற்றிகளுக்கெல்லாம்; காரணம் என்றார்

No comments:

Post a Comment